2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

செல்வநாயகம் கபிலன்   / 2017 ஒக்டோபர் 23 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். நவாலி பகுதியில் வாள்வெட்டுக் குழுவொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் வீட்டுக்கு முன்னால் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து விட்டு தப்பி சென்ற சம்பவம் நேற்று  (22) இரவு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, 270,000 ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீயில் எரிந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் கொண்ட குழுவினரே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வழக்குப் பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார், சி.சி.டி.வி கமராக்களின் உதவியுடன் சந்தேகநபர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .