Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஓகஸ்ட் 19 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக மோட்டார் போக்குவரத்து பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுவதாகவும் அதேவேளை, இறப்புகளும் அதிகரித்து செல்கின்றபோக்கு காணப்படுவதாகவும் கூறினார்.
இந்த நிலையில், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதேபோல கொன்சியூலர் பிரிவு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே செயற்படுத்தப்படுகின்றன எனவும், அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தி, அதனை மீள ஒரு ஒழுங்குமுறையில் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (23) பின்னர் ஆரம்பிக்கப்படும் எனவும், மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்.
'எனவே, பொதுமக்கள் மிகவும் அத்தியாவசிய நோக்கங்களுக்காக மாத்திரமே, மாவட்ட செயலகத்துக்கு வருகை தர வேண்டும். எனினும், தற்போதுள்ள சூழ்நிலையில, இன்றும் (19) நாளையும் (20), இந்த கிளைகளை மூடி, சேவைகளை நிறுத்தியுள்ளோம்.
'எதிர்வரும் திங்கட்கிழமையில் (23) இருந்து குறிப்பிட்ட திணைக்களங்களுக்குரிய சேவைகள் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் செயற்படுத்தப்படும்' என்றார்.
அதேபோல், மோட்டார் திணைக்களத்தின் எழுத்துப் பரீட்சை மற்றும் பிரயோக ஓட்டப் பயிற்சி என்பன தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், மோட்டார் போக்குவரத்து பிரிவை பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனவும் அந்தப் பதிவின் ஊடாக பொதுமக்கள் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் கூறினார்.
அத்துடன், 'ஏற்கெனவே மோட்டார் திணைக்களம் அறிவித்துள்ள புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் அவதியுராது மிக மிக அத்தியாவசிய தேவைகளை மாத்திரம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் பெற்றுக்கொள்ள முடியும்' என்றும், மாவட்டச் செயலாளர் கூறினார்.
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago