2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மோதல்: முன்னாள், இந்நாள் தலைவர்கள் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிற்சங்கத்தின் இரண்டு தரப்புகளுக்கு இடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் சம்பவம், யாழ்ப்பாணம் - திருநகர் பகுதியில், நேற்று  (17) இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர், கையூட்டு வாங்கியதாகக் அந்தச் சங்கத்தின் புதிய தலைவர் குற்றச்சாட்டியதையடுத்தே, இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கத்தின் தற்போதைய தலைவர் மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்த மூவரும் சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் அவரது தரப்பில் மூவரும் என 8 பேர், கைதுசெய்யப்பட்டனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில், நேற்று  (17) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, முன்னாள் தலைவர் கையூட்டுப் பெற்றதாக, புதிய தலைவர் குற்றச்சாட்டை முன்வைத்தார். அது தொடர்பில் அவரிடம் விளக்கம் கேட்கச் சென்ற போதே, அவரது தரப்பினர் முன்னாள் தலைவரைத் தாக்கினார்களென, முன்னாள் தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுரைத்தார்.

இதையடுத்து, முன்னாள் தலைவர் கைய்யூட்டுப் பெற்றார் என்று தற்போதைய தலைவருக்கு முறைப்பாடுகள் கிடைத்ததாகவும் அது தொடர்பில் விசாரணை செய்த போதே, முன்னாள் தலைவரும் அவரது தரப்புகளும் தற்போதைய தலைவரையும் ஏனையோரையும் தாக்கியதாக, என புதிய தலைவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்றம், 8 பேரையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X