2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

யாழ். கல்வி அபிவிருத்திக்கு ரூ.3,600 மில்லியன் தேவை

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

யாழ்.மாவட்டத்தில் 2016 தொடக்கம் 2018ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள 3, 684 மில்லியன் ரூபாய் (3684.30) தேவையாகவுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகத்துக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் தேவைகளை ஆராய்ந்ததன் அடிப்படையில் அபிவிருத்தி நடவடிக்கைக்கான நிதியானது கணிக்கப்பட்டுள்ளது.

106 வகுப்பறைகள் அமைக்க 1126.90 மில்லியன் ரூபாயும் 118 விஞ்ஞான ஆய்வுகூடங்கள் அமைக்க 524 மில்லியன் ரூபாயும் 21 தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் அமைக்க 170 மில்லியன் ரூபாயும், 15 கூடங்களில் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்த 425 மில்லியன் ரூபாயும், 93 கணிணி கூடங்கள் அமைக்க 224.90 மில்லியன் ரூபாயும், 80 நூலகங்கள் அமைக்க 380.80 மில்லியன் ரூபாயும், 71 செயற்பாட்டு அறைகள் அமைக்க 496.80 மில்லியன் ரூபாயும், 93 பாடசாலைகளில் கழுவும் வசதிகளை ஏற்படுத்த 187 மில்லியன் ரூபாயும், 6 வலயங்களில் கட்டடங்கள் அமைக்க 63 மில்லியன் ரூபாயும், 13 கோட்டக் கல்வி அலுவலகங்களில் கட்டடங்கள் அமைக்க 85.90 மில்லியன் ரூபாயும் தேவைப்படுகின்றது.

இதனைவிட 130 பாடசாலைகளுக்கு தளபாட வசதிகளும் 125 பாடசாலைகளுக்கு கணிணிகளும் 72 பாடசாலைகளுக்கு விஞ்ஞான ஆய்வுகூட உபகரணங்களும், 12 பாடசாலைகளுக்கு இயந்திர உபகரணங்களும், 350 பாடசாலைகளுக்கு கற்பித்தல் உபகரணங்களும், 255 பாடசாலைகளுக்கு புத்தகங்களும் வாசிப்பு மூலங்களும், 96 பாடசாலைகளுக்கு விஞ்ஞான இரசாயனப் பதார்த்தங்களும் தேவையாகவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X