Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 மே 11 , மு.ப. 04:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 9 சந்தேகநபர்களையும் இன்று புதன்கிழமை (11) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளமையால், நீதிமன்ற வளாகம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் ஆகியோரின் கடும் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கின் சந்தேகநபர்களை 2015 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் போது, நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளாகியிருந்தது. அதனைக் கருத்திற்கொண்டு இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு, ஒரு வருடமாகியுள்ளமையால் தொடர்ந்தும் வழக்கை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடத்துவதற்கான அனுமதியைப் பெறும் பொருட்டு, இந்த வழக்கு இன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது. இதன்போது, 9 சந்தேகநபர்களும் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி, 2015ஆம் ஆண்டு மே மாதம் 13 ஆம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 13ஆவது சந்தேகநபரையும் குற்றப்புலனாய்வு பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இரகசியமான முறையில் ஆஜர்ப்படுத்தியுள்ளனர். அந்தச் சந்தேகநபர் கொலையுடன் தொடர்புடையவரா அல்லது சாட்சியாளரா? என எவ்வித தகவல்களும் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago