2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழ்ப்பாண நகரத்தில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு

Niroshini   / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண நகரப் பகுதியில் வர்த்தக நடவடிக்கையில் சிறுவர் தொழிலாளர்கள் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.

நகரப் பகுதியில் ஊதுபத்தி விற்பனை செய்தல், பண்ணை மீன் சந்தையில் மீன் விற்பனை செய்தல் மற்றும் தேன் விற்பனை செய்தல் போன்றவற்றிலேயே சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பில் அவர்களின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் நடவடிக்கையில் மாவட்டச் செயலக சிறுவர் அதிகார சபை மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

மேலும், யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில், நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரத் தகவல்கள் மேலும் குறிப்பிடுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X