Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2016 ஜனவரி 03 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
யாழ். மாவட்டத்தில் இவ்வருடம் 2 ஆயிரம் ஹெக்டேயர்; நிலப்பரப்பில் வெங்காயம் பயிரிட எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கி.ஸ்ரீபால சுந்தரம் தெரிவித்தார்.
வெங்காயத்தின் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் வறுமைகோட்டுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு விதை வெங்காயங்களை மானிய அடிப்படையில் வழங்கி, தன்னிறைவான உற்பத்தியினை பெற்றுக்கொள்ளும் முகமாக இம்முறை வெங்காய பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
உற்பத்திச் செலவினைக் குறைத்து, இலாபத்தினை அதிகமாக பெற்றுக்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் விதை வெங்காயங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக விவசாயிகளுக்கு பயிற்சிகள், ஊக்குவிப்புகள் என்பன விவசாய போதனாசிரியர்கள் மூலம் வழங்கப்பட்டு காலபோக செய்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 900 தொடக்கம் 1000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட வெங்காய உற்பத்தி, யாழ். மாவட்டத்துக்கு கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக டிசம்பர் மாதம் பெய்த கடும் மழை காரணமாக வெங்காய நடுகை பின் தள்ளப்பட்டிருந்தது.
மேலும், பருவ மழை நிறைவடைந்து வெங்காய உற்பத்திக்கு தோட்ட நிலங்கள் பண்படுத்தும் போதும் கடந்த மாத இறுதியில் பெய்த மழை காரணமாக உடனடியாக விவசாயிகளால் வெங்காயத்தை பயிரிட முடியாமல் போனது. எனினும், விவசாயிகள் தற்போது மீண்டும் தோட்ட நிலங்களை மீள் தயார்படுத்தல் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதனை அவதானிக்க முடிகிறது. தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள வெங்காயச் செய்கையின் அறுவடையினை ஜனவரி மாத இறுதியில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பிரதி விவசாய பிரதி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
4 hours ago
4 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
19 Jul 2025