2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யாழ்ப்பாணம் முஸ்லிம் வியாபாரிகள் கலந்துரையாடல்

Kogilavani   / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியேறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் முஸ்லிம் வியாபாரிகளின் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள பெரிய முஹிதீன் ஜூம்மா பள்ளியில் வியாழக்கிழமை (10) நடைபெற்றது.

கலந்துரையாடலில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் ஆயுப் அஸ்மின்,“அங்காடி வியாபாரிகளின் பிரச்சினைக்கு யாழ்;ப்பாணம் மாநகர சபை ஆணையாளருடன் நேரில் சந்தித்து தீர்வு காணப்படும். வாழ்வாதார உதவிகள், சிறுகைத்தொழிலாளர்களுக்கு வட்டியில்லா கடன் வசதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

“இரும்பு வியாபாரிகளின் பிரச்சினை மற்றும் பெரிய முதலீட்டாளர்களின் பிரச்சினையை தனியாக சந்தித்து கதைத்து தீர்க்கப்படும். அத்துடன், பழைய இரும்பு சேகரிப்பாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகள் தொடர்ந்து அந்த வியாபாரத்தை நம்பியிராமல் வேறு வியாபாரங்களை மேற்கொள்வது பயனுள்ளதாக அமையும்” என்றும் அவர் கூறினார்.

இரும்பு சேகரிப்பாளர்களுக்கு ஒரு கிலோவுக்கு வழங்கப்படும் பெறுமதி 50 ரூபாயில் இருந்து 20 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. பழைய இரும்பு கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகள் இரண்டு பூட்டப்பட்டமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .