2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழத்திலும் மே 18 நிகழ்வுகள்

George   / 2016 மே 17 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மே 18 நினைவேந்தல் நிகழ்வு, பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் இந்த மாணவர் ஒன்றியம் செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

'யுத்த விதிகளை மீறி ஒரு தனி இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட மிகப்பெரிய மனிதப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுகள் ஆறாத ரணங்களாக மீண்டும் ஒருமுறை நினைவில் எழுகின்றன.

அந்நாளில் உயிர்துறந்த அப்பாவி உயிர்களுக்கு மறுக்கப்பட்ட நீதி, இன்று மறைக்கப்பட்ட நீதியாகியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம், குற்றமிழைத்தோரை எவ்வித கேள்விக்கும் உட்படுத்தாமல் சுதந்திரமாக நடமாடவிட்டுள்ளது' என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X