2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாவட்ட செயலகம் முற்றுகை

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

தமக்கான வீட்டுத் திட்டத்துக்கான நிதி, இதுவரை வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாவற்குழி குடியேற்றத்திட்ட மக்கள், யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

நாவற்குழி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த புதுக்குடியேற்றத் திட்ட மக்களுக்காக, வீடமைப்பு அதிகாரசபையின் கீ​ழ், வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

கடந்த மாதம், குறித்த மக்கள் அமைத்திருந்த அவர்களது தற்காலிக வீடுகளை நீக்கிவிட்டு, அங்கு புதிய வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல்கள் நாட்டப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து, புதிய வீட்டுக்கான கட்டுமாண வேலைகளை மேற்கொள்வதற்கான பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பணமானது, இன்னமும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, அம்மக்களால் மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, இவ்விடயத்தை தனது பொறுப்பில் ஏற்று, உரிய நிதியைப் பெற்றுத் தருவதாக, மாவட்டச் செயலாளர் உறுதியளித்ததை அடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X