2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழ். மாவட்டத்துக்கான போசாக்கு மட்டத்தை அதிகரிக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

Gavitha   / 2016 ஜூன் 11 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

போசாக்கு மட்டத்தை அதிகரித்து போசாக்கற்றவர்களின் சதவீதத்தை குறைப்பதை அடிப்படையாக் கொண்ட தேசிய வேலைத்திட்டம் யாழ். மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நாடுபூராகவும் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்றிட்டத்தின் யாழ். மாவட்டத்துக்கான நிகழ்வு, யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்றது.
யாழ். மாவட்டத்தில் காணப்படும் போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்து போசாக்கை மேம்படுத்துவது தொடர்பில் சுகாதார அமைச்சிலிருந்து வருகைதந்திருந்த வளவாளர்களால் விரிவுரைகள் இதன்போது இடம்பெற்றது.
மேலதிக மாவட்டச் செயலர் செந்தில் நந்தனன், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X