2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யாழ். மறைமாவட்ட புதிய கணக்காளராக நியமனம்

George   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கணக்காளராக அருட்பணி செபமாலை நேசநாயகம் (நேசன்) அடிகளார், யாழ். மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதிய ஆயராக  ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவு செய்யப்பட்டதையடுத்து,  யாழ். மறை மாவட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், யாழ். மறை மாவட்டத்தின் கணக்காளராக அருட்பணி செபமாலை நேசநாயகம் (நேசன்) அடிகளார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அருட்பணி  செபமாலை நேசநாயகம் (நேசன்) அடிகளார், நெடுந்தீவு பங்குத்தந்தையாக தற்போது கடமையாற்றி வருவதனால் கணக்காளர் கடமைகளை எதிர்வரும் 7ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .