2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

யாழில்…

Princiya Dixci   / 2017 மார்ச் 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஸன்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கக் கூடாது எனத் தெரிவித்து, யாழ். மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்றுப் புதன்கிழமை (22) கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதில் கலந்துகொண்ட மக்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

“இந்தத் தீர்மானத்தை பிற நாடுகளுடன் சேர்ந்து கூட்டாக முன்மொழிந்தது சிறீலங்கா, ஒன்றரை ஆண்டுக் காலத்தில், அதாவது 2017 மார்ச் மாதத்துக்குள் தன் கடப்பாடுகளை நிறைவேற்றவும் அது முழுமையாகப் பொறுப்பேற்றது. இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் சிறீலங்காக அரசாங்கம் தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியாக எதுவும் செய்வில்லை. சிறீலங்கா குடியரசுத் தலைவரும் மற்ற தலைவர்களும் தீர்மானத்தின் முதன்மை கூறுகளை விசாரணைகளில் பன்னாட்டு நீதிபதிகளை இடம்பெறச் செய்வது உள்ளிட்டவற்றை பகிரங்கமாகத் திரும்பத் திரும்ப நிராகரித்தும் உள்ளார்கள்.

“இந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன என்பதை பல அறிக்கைகள் ஆவணப்படுத்தியுள்ளன. இவற்றுள் ஒன்று சித்திரவதை பற்றிய ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் யுவான் மெண்டிஸ் அண்மையில் அளித்த அறிக்கை, பன்னாட்டு உண்மை மற்றும் நீதிதிட்டம் அண்மையில் தந்த அறிக்கை சிறீலங்கா இராணுவம் நடத்தும் பாலியல் வல்லுறவுகள், முகாம்கள் பற்றிய விவரங்களை வெளிப்படுத்தியது. இந்த முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்துள்ளனர்.

“சிறீலங்காக முந்ததைய தீர்மானத்தின்படி தன் கடப்பாடுகளை நிறைவேற்ற உருப்படியான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. ஆதலால் இந்த  தீர்மானம்  மட்டும் செயலாக்கப்படும் என ஐ.நா மனித உரிமைகள் மன்றம் எப்படி எதிர்பார்க்கலாம்.

“எங்கள் புதல்விகளை குடும்பத்தினரையும் கொன்றும், காணாமல்போக செய்தும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கியும், கொடுமைகள் செய்த பத்தாயிரக்கணக்கான பாதுகாப்பு படையினர் இன்றளவும் எம்மிடையே நிறுத்தப்பட்டுள்ளனர். கால நீடிப்பு ஏதும் தரப்படுமானால் எமக்கும் தமிழ் மக்களுக்கும் ஆபத்து உண்டாகும்” என்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .