2025 ஜூலை 16, புதன்கிழமை

யாழில் பெண்ணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்
 

யாழ்ப்பாணம், உணாவில் இராசா கடைக்கு அருகிலுள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம், இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
 
விஜிதரன் யாழினி (வயது 35) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது.
 
குறித்த வீட்டில் துர்நாற்றம் வீசியதையடுத்து அப்பகுதி மக்கள், பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டுள்ளனர். 

சடலம், தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது கொலையாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X