2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

யாழில் 5,047 பேர் பாதிப்பு

George   / 2016 மே 17 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக யாழ்;. மாவட்டத்தில் 1,168 குடும்பங்களைச் சேர்ந்த 5,047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு உதவிப் பணிப்பாளர் எஸ்.ரவி, செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

பாதிப்புகள் குறித்து மேலும் தெரிவிக்கையில், 

'யாழ். மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இந்த மக்கள், இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகள் வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பாதிப்பில் 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன.

மேலும், 105 வீடுகள் பகுதியளவு சேதமடைந்தன. 6 மீனப் படகுகள் முற்றாக அழிவடைந்துள்ளதுடன் 3 படகுகள் சிறியளவில் சேதமடைந்துள்ளன. 

இதேவேளை, மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது' என விவரித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X