2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

யாழில் மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம்

George   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மாதா கோயிலுக்கு அருகாமையில், புதன்கிழமை  இரவு வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. மோட்டார் சைக்கிளில், குறித்த பகுதிக்கு வந்த மூவர், முகங்களை துணியால் மறைத்துக் கட்டியவாறு, அப்பகுதியில் நின்ற இளைஞர்களை வாளால் வெட்ட முயன்றுள்ளனர்.

எனினும் இளைஞர்கள் தப்பியோடியதால் அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X