2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யுவதி கர்ப்பம்: சிப்பாய் கைது

Kanagaraj   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

யுவதி  ஒருவரை காதலிப்பதாக கூறி, அவரை 5 மாத கர்ப்பிணியாக்கிய இராணுவச் சிப்பாய், இராணுவ  அதிகாரிகளால் வியாழக்கிழமை (09) இரவு கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

படைச் சிப்பாய்  அங்குள்ள யுவதி ஒருவரை காதலிப்பதாக கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதன் காரணமாக குறித்த யுவதி தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

திருமணமாகாத, குறித்த யுவதியின் வீட்டுக்கு அடிக்கடி சென்று இரவில் தங்கி நிற்பதனை வழக்கமாக படைச் சிப்பாய் கொண்டுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ளாத கிராம மக்கள் பிரதேச இராணுவ உயரதிகாரிகளின் கவனத்துக்கு தகவலை கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து படைச்சிப்பாய் குறித்த யுவதியின் வீட்டுக்குசென்று தங்கியிருந்த போது உடனடியாக  மூன்று வாகனங்களில்  சீரூடையுடன் விரைந்த படை அதிகாரிகள், வியாழக்கிழமை இரவு பத்து மணியளவில் சிப்பாயை கைது செய்துள்ளனர்.

குறித்த யுவதியின் பெற்றோர்கள் விவேகமானவர்கள் அல்ல என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் இராணுவத்தினர்  விடுமுறையில் செல்வதானால் விடுமுறை என்ற பெயரில்  எழுநாட்களும்  அல்லது  பாஸ்  என்றபெயரில்  மூன்று நாட்களும்  விடுமுறை எடுக்கலாம்.  குறித்த  இராணுவச் சிப்பாய், மூன்று  நாட்கள்  விடுமுறை  எடுத்துக்கொண்டே  முகாமினை விட்டு வெளியேறி உள்ளார்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X