2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாரும் பாடசாலைக்குச் செல்ல மாட்டார்கள்

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

என். ராஜ், எஸ். தில்லைநாதன்

திங்கள் முதல் ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலைக்குச் செல்ல மாட்டார்கள் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

நாளை பாடசாலைகள் ஆரம்பமாகும் போது எவ்வாறு  நடந்துகொள்ள வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது இலங்கையின் அனைத்துப் பாடசாலைகளையும் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களை குழப்புகின்ற அரசியலாகவே இருக்கின்றது அதாவது நகர்ப்புற பாடசாலைகள் மூன்று நாட்களும் கிராமப்புற பாடசாலைகள் ஐந்து நாட்களும் நடைபெற வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

இது ஒரு வேடிக்கையான விடயம். கிராமப் புறங்களில் கல்வி கற்பிக்கும்  ஆசிரியர்கள் ஒட்டுமொத்தமாக நகரங்களிலிருந்து செல்கின்றவர்கள். அவர்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே இங்கில்லை. பொதுப் போக்குவரத்து பேருந்துகள் கூட அந்த ஆசிரியர்களை ஏற்றிச்செல்ல மறுக்கின்றன அவர்கள் தனியாகச் செல்வதற்கு எரிபொருள் இல்லை.

இந்த நிலையில் அவர்களை பாடசாலைக்குச் சென்று  மாணவர்களுக்கு கற்பியுங்கள்  என்று கூறுவது உண்மையில் மோசமான ஒரு அறிவிப்பு

மாணவர்களுக்கு கற்பிக்க கூடிய மனநிலையில் ஆசிரியர்களோ அல்லது கற்கக்கூடிய மனநிலையில் மாணவர்களோ இல்லை என்பதனை அரசாங்கம்  தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும் .

எரிபொருளுக்காக தீர்வு கிடைக்கும் வரை  மறுதினம் திங்கள் முதல் நாங்கள் யாருமே பாடசாலைக்குச் செல்ல மாட்டோம் இது உறுதியான அறிவிப்பு. 

இதனை கல்வி அமைச்சருக்கும் கல்வி அமைச்சர் உடைய செயலாளருக்கும் மாகாணங்களில் கல்வி அமைச்சு செயலாளர்களுக்கும் மாகாணங்களின் பணிப்பாளர் களுக்கும் வலயங்களின் பணிப்பாளர்களுக்கு நாங்கள் தெளிவாக அறிவித்திருக்கின்றோம்.

ஆகவே இந்த அறிவித்தலை மாகாண செயலாளர்கள் மாகாண பணிப்பாளர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அதிபர்கள் கூட புரிந்துகொண்டு நடக்க வேண்டும் என்று இந்தச் சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்கின்றோம் என்று கூறியுள்ளனர். (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .