Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 12 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், என்.குகன்
யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் எந்த ஒரு நபரும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட -வில்லையென, அதன் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபரொருவர், நேற்றையதினம் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டாரெனவும் எனினும் அவர் இத்தனை நாளாக பொலிஸாரினால் கைது செய்ய முடியாதவாறு தலைமறைவாகியிருந்தாரெனவும் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர் என்ற அடிப்படையில் அவர் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருந்தாரெனத் தெரிவித்த அவர், சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டியது எமது கட்டாயமாகுமெனவும் கூறினார்.
“அதைத்தான் செய்தோமே தவிர, நாம் எவரையும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வில்லை” என்றும் அவர் கூறினார்.
“சந்தேக நபர் ஒருவர் சித்திரவதைக்கு உள்படுத்துவதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை 5.30 மணியளவில் அங்கு சென்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர், சந்தேக நபர் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் மீட்டெடுத்தார்.
“சந்தேக நபர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு இரண்டு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்” எனவும் அவர் கூறினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொய்யான வழக்கைத் தாக்கல் செய்தமை தொடர்பில் மன்றின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பொலிஸார் நேற்று நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சித்திரவதைச் செய்தியை மறுத்துள்ளாரெனவும், அவர் கூறினார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago