2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

யாழில் 11 வயதுச் சிறுவனை பலியெடுத்த டெங்கு

Freelancer   / 2022 பெப்ரவரி 15 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வினோத்

யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால்  உயிரிழந்துள்ளார். 

கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். 

இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .