2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

யாழில் 37 பேர் தடுத்து வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 06 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறு அறிவித்தல் வரும் வரை, யாழ்ப்பாணத்துக்கு ஊரடங்குச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எந்தவொரு காரணமும் இன்றி, யாழ்ப்பாணம் நகரத்துக்கு இன்று (06) வருகை தந்த 37 பேரை, பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.

மருந்தகங்கள், வங்கிக்கிளைகள் அனைத்தும் மக்கள் தேவைகளுக்காக திறக்கப்பட்டுள்ள நிலையில், காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால், பொலிஸ் வீதித்தடைகள் இடப்பட்டு, வாகனங்களில் சென்றுவருவோரிடம், நகரத்துக்கு வந்தமைக்கான காரணங்கள் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது அவசியமின்றி வந்த 37 பேரை, பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X