Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் - மருதனார்மடம் பகுதியில் உள்ள விடுதி ஒன்று இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்ட 41 இளைஞர்களும், வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்று, சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றிரவு 10 மணிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 41 இளைஞர்களும், இன்று அதிகாலை 1 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.
“இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து 41 பேரும் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன், இராணுவ அலுவலகரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டது.
“சந்தேகநபர்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்குகள் உள்ளனவா? பிடியாணை உள்ளனவா? என்பது பெரும் குற்றப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரப்பட்டது. அவ்வாறான ஒன்றும் இல்லை என்ற காரணத்தால் 41 பேரும் விடுவிக்கப்பட்டனர்” என்றும் பொலிஸார் கூறினர்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026