Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ், எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி காரணமாக, இராணுவ வீரர் ஒருவர் உட்பட இருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வௌ்ளிக்கிழமை (13) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவரே, இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மற்றொருவர் வவுனியாவிலிருந்து அழைத்துவரப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
“இருவருக்கும் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப மருத்துவ சோதனைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை. எனினும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்படுகிறது” என்று, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
6 hours ago
7 hours ago