2025 மே 10, சனிக்கிழமை

யாழில் இருந்து காலிக்கு பாதயாத்திரை

Editorial   / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன

காலி - அக்மீமன பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பாலகுமார என்ற நபர் இன்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து காலிக்கு தனது பாதயாத்திரை ஆரம்பித்தார்.

கடந்த மாதம் எட்டாம் திகதி காலையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான பாதயாத்திரையின் ஆரம்பித்த அவர் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் வந்தடைந்தார்.

யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி மீகா ஜந்துரஸ்ரீ விமலரத்ன தேரரை சந்தித்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டார்.

இன்று காலை அவர் தனது பாதயாத்திரையினை காலிக்கு ஆரம்பித்தார். இந்த பாதயாத்திரையின் ஆரம்ப நிகழ்வில் 51ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் டெலிட் ரத்னாயக்க கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக இலங்கை கொடியினை வழங்கி பாதயாத்திரை ஆரம்பித்து வைத்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் - 19 தொற்றிலிருந்து இலங்கை முழுமையாக விடுபட வேண்டும், நாட்டில் சாந்தி சமாதானம் ஏற்பட வேண்டும்,முப்படையினருக்கான ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பாதயாத்திரையை ஆரம்பித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X