2025 மே 03, சனிக்கிழமை

யாழில் இருந்து திருக்கோணேஸ்வரத்துக்கு யாத்திரை

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 19 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோவில் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்று முன்தினம் (17) இரவு  ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலகத்தில்,  நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் எடுத்த தீர்மானத்துக்கு அமைய, இந்த யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

ஈழத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவாரப் பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கிலான முதல் நடவடிக்கையாக இந்த யாத்திரை முன்னெடுக்கப்படுகிறது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X