Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 11 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த், டி.விஜிதா, எஸ்நிதர்ஷன், எஸ். கர்ணன்
“கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது” என, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று (10) நடைபெற்ற வருடாந்த விருந்துபசார விழாவும் இடமாற்றலாகும் உத்தியோகத்தர்களுக்கான கெளரவிப்பு விழாவிலும் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் இணைந்த ஒன்றே நீதிமன்றக் குடும்பம். இந்த மூன்று தரப்பினரிடமும் ஒற்றுமை அவசியம். அதுவே எனது சேவையின் குறிக்கோளாகும்.
“கிழக்கு மாகாண மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பது எனது அவா. அதற்காக நான் யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது. யாழ்ப்பாணத்து வந்ததன் நோக்கத்தை நிறைவேற்றிவிட்டேன்.
“அடுத்ததாக மட்டக்களப்புக்குச் செல்லவுள்ளேன். அந்த மாவட்ட மக்களுக்கு நான் சேவையாற்றவேண்டும். அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும்” எனத் தெரிவித்தார்.
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
8 hours ago