Freelancer / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 08:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக காணப்படுகின்றனர்.
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்டு அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் கூறினர்.(R)

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .