2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் எரிவாயு விநியோகத்தில் குழப்பம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத், எம்.றொசாந்த்

யாழ். மாவட்டத்தில் உள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு சுமார் 1,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக யாழ். மாவட்ட செயலகத்தால் அறிவிக்கப்பட்டதாக தெரிவித்து  அரச உத்தியோகத்தர்கள் இன்று யாழ். பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் உள்ள அரச திறன் விருத்தி மையத்தில் ஒன்று கூடினர்.

இதன் போது குறித்த பகுதிக்கு வந்த பொதுமக்கள் சிலர் தமக்கு எரிவாயு சிலிண்டர்கள் வேண்டுமென கேட்ட நிலையில் அங்கு குழப்ப நிலை ஏற்பட்டது.

இதன்போது அங்கு நின்ற அதிகாரிகள் “அரச உத்தியோகத்தர்களுக்கு மட்டும் எரிவாயு வழங்கப்படுவதாக” தெரிவித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த பொதுமக்கள் தமது பிரதேசங்களில் எரிவாயுக்காக பெயர்களை பதிவு செய்த நிலையில் இவ்வாறு பெருமளவு சிலிண்டர்களை அரச உத்தியோகத்தர்களுக்கு  ஒரே தடவை வழங்குவது எவ் விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பினர்.

குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப் பிள்ளை மகேசன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதிபனை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த பகுதியில் அரச உத்தியோகத்தர்களுக்கு  எரிவாயு விநியோகத்தை மேற்கொள்வதற்கு  அனுமதி வழங்கவில்லை என தெரிவித்தனர். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X