Freelancer / 2023 மே 13 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்.நகர் பகுதியை அண்மித்த பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவின் கீழ் பொது சுகாதார பரிசோதகரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
யாழ். நகர் பகுதியில் உள்ள உணவகங்களில், யாழ்.மாநகர சபை பொது சுகாதார பரிசோதகர்களினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த இரு உணவகங்களுக்கு எதிராக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளை அடுத்து உணவக உரிமையாளர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் ஆள் பிணையில் செல்ல அனுமதித்த நீதிமன்று , இரண்டு உணவகங்களுக்கு சீல் வைக்குமாறு பணித்ததுடன் , வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அதேவேளை யாழ். ஆனைப்பந்தி பகுதியில் அமைந்திருந்த கொத்து கடையும் யாழ்.நீதிமன்ற உத்தரவில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதிகளில் இயங்கி வந்த மூன்று உணவகங்களுக்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. R
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025