2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கஞ்சா சிக்கியது: ஐவர் தப்பியோட்டம்

Editorial   / 2025 ஜூன் 15 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாணம் - பொன்னாலை காட்டு பகுதியில் பெருமளவான கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர், செவ்வாய்க்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐவர் தப்பிச் சென்றுள்ளனர். அத்துடன் 5 துவிச்சக்கர வண்டிகளும் மீட்கப்பட்டன.

இதன்போது மாதகல் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 293 கிலோ 497 கிராம் எடையுடைய கேர்ள் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால அவர்களின் வழிகாட்டலின் கீழ், யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .