Freelancer / 2022 ஜூன் 28 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு, கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் - இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி, கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பான நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை, கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் நாம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்திருக்கின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும். சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும்
என்றனர்.
இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (R)
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago