2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழில் ’’காதலி’’ வாழை

Editorial   / 2023 ஒக்டோபர் 01 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில் "கதலி" வாழைக்கு பதிலாக "காதலி," வாழை என்று எழுதப்பட்டிருந்த விளம்பரம் திரையில் தோன்றியது.

தவறுகள் விடுவது மனித இயல்பு ஆனால் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இவ்வாறான கருத்துப் பிழையான பொருள் கோடல்கள் இடம்பெறுவது பிரதம திட்டமிடல் கிளையினர் தாங்கள் பெற்றுக்கொண்ட விடயங்களை உயர் கலந்துரையாடல் ஒன்றுக்கு சமர்ப்பிக்கும் போது திரும்ப மேற்பார்வை செய்யவில்லை என்பதே அர்த்தம். 

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடல் கடந்த இரு மாதங்களாக கூட்டத்துக்கு திகதி இடப்பட்டும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கொழும்பு சந்திப்புக்களின் நிமித்தம் பிற் போடப்பட்டது.

அவ்வாறான நிலையிலும் கூட ஏற்கனவே தயாரிக்கப்பட்ட விடயதானங்கள் கூட்டத் திகதிகள் பிற்போடப்பட்டும் எழுத்துப் பிழைகள் அவதானிக்கப்படவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X