Freelancer / 2022 பெப்ரவரி 12 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.விஜித்தா
வட்டுக்கோட்டை - அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
கட்டுப்படுத்த முடியாத அதிவேகம் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குறித்த விபத்து நிகழ்ந்த இடத்தில் ஆபத்தான வளைவு ஒன்று உள்ளது. அத்துடன் வீதி அபிவிருத்தி நிறைவடைந்த நிலையில் வீதியின் ஓரத்தில் போடப்படவேண்டிய எல்லைக்கோடு இன்னமும் போடப்படவில்லை. என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் குறித்த இடத்தில் வேகக் கட்டுப்பாட்டு தடை போடப்படவேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
உடையார் கட்டு - விசுவமடு பகுதியை சொந்த இடமாகக் கொண்டு, வட்டு மேற்கு - வட்டுக்கோட்டை பகுதியில் வசித்துவந்த கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வட்டு மேற்கு - வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
6 hours ago