2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

யாழில் கோர விபத்து - குழந்தை உட்பட இருவர் மரணம்

Freelancer   / 2024 பெப்ரவரி 14 , பி.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் வானொன்று புகையிரதத்துடன் மோதி  விபத்துக்குள்ளானதில் குழந்தையொன்று உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் வானில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பெண்ணொருவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்தில் இணுவில் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சயந்தன் மற்றும் அவரது மகளான 6 மாத குழந்தை அப்சரா ஆகியோரே உயிரழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் புகையிரத கடவை காப்பாளர் இல்லாததே விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X