Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Niroshini / 2021 நவம்பர் 25 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டத்துக்கான இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகள் ஆகியோர், யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசனை, இன்று (25) சந்தித்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்துக்கு விஜயம் செய்த அவர்கள், மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.
இந்தச் சந்திப்பில், உலக உணவுத்திட்டத்தால் யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, போசாக்கு குறைபாடு, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டம் மற்றும் ஜீவனோபாயத் திட்டங்கள் என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .