2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யாழில் தேசிய புத்தாண்டு நிகழ்வு

Editorial   / 2018 ஏப்ரல் 16 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று (16) நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலர் என்.வேதநாயகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேற்படி தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கலந்து கொண்டிருந்தார்.

மேலும், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் வடமாகாண கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து கொண்டார். இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .