2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

’யாழில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியது’

Niroshini   / 2021 ஜூன் 28 , பி.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், டி.விஜித்தா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தை தாண்டியுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில்,  இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கொரோனா நிலைமையை அவதானிக்கும் போது, இன்று (28) மாலை வரை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,190ஆக அதிகரித்துள்ளதெனவும் அதேநேரம்,  கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் 87ஆக உயர்ந்துள்ளதெனவும் கூறினார்.

மேலும், 4,616 குடும்பங்களைச் சேர்ந்த 13,793 பேர் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்றும், அவர் தெரிவித்தார்.

அத்துடன், "சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சாவற்காடு கிராம அலுவலர் பிரிவும் யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஜே/69, ஜே,71 கிராம அலுவலர் பிரிவுகளும், கரவெட்டி பிரதேச செயலகத்துக்குட்பட்ட கரணவாய் பகுதியும் 
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன" என்றார். 

மேலும், யாழ். மாவட்டத்துக்கு கிடைத்துள்ள 50,000 தடுப்பூசிகள், இன்று தொடக்கம், முதல் டோஸ் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்த மாவட்டச் செயலாளர், முதல் டோஸ் தடுப்பூசி பெற்ற நிலையங்களுக்கே சென்று, 2ஆவது டோஸுக்கான தடுப்பூசிகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் கூறினார்.
 
நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய சகல பிரதேசங்களிலும் 2ஆவது டோஸ் தடுப்பூசி போடும் பணி, வெள்ளிக்கிழமை (02) வரை இடம்பெறும் என்றும், மகேசன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .