Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
அந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago