2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

யாழில் பஸ் விபத்து: 24 ​பேர் படுகாயம்

Editorial   / 2021 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்.  நிதர்சன் வினோத்,என்.ராஜ்

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை சொந்தமான பஸ், கல்லுண்டாய் வீதியில் விபத்துக்கு உள்ளானது.

இதில், 24 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும்    யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இங்கு வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில், வேகமாக வந்த பஸ் மழை காரணமாக சறுக்கி விபத்துக்குள்ளாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .