Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2021 நவம்பர் 29 , பி.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
யாழ்ப்பாண மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்வதில்லையென தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாவட்ட பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் மற்றும் யாழ் மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கங்களுடன் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ஆகியோருடன் இன்றைய தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் கோதுமை மாவின் விலை அதிகரித்ததன் காரணத்தால் 450 கிராம் நிறையைக் கொண்ட பாணின் விலையை 10 ரூபாவினால் அதிகரித்து 85 ரூபாய்க்கு விற்பனைச் செய்வதற்கும், ஏனைய வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படுவதில்லையென தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .