Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் பகுதியில் சில காலமாக இயங்கி வந்த பூங்கா ஒன்றிற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சுமார் 80 பேர்ச்சஸ் பரப்பளவில் பராமரிக்கப்பட்டு வந்த இத்தோட்டத்தை அழகுபடுத்தும் வகையில் சிறிய அறைகள் கட்டப்பட்டு, அந்த அறைகளில் பல்வேறு தவறான சம்பவங்கள் நடப்பதாக முறைப்பாடுகள் எழுந்ததையடுத்து இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், திருமண நிகழ்ச்சிகளின் போது படப்பிடிப்பு நடத்துவதற்கு ஏற்ற வகையில் இந்த இடம் அமைக்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவம் தொடர்பில் அதன் உரிமையாளரான 78 வயதான வர்த்தகர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த பூங்காவில் உள்ள அறையில் சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் யாழ். பிரதேசவாசிகளிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் பிரகாரம் இந்த பூங்கா தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் உரிமையாளர் இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025