Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2021 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்சன் வினோத்
தன்னை பொலிஸ் எனக் கூறி தந்திரமான முறையில் நகை மற்றும் பணங்களை கொள்ளையடித்த நபரை யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செயதனர்.
யாழ் நகரப்பகுதி, நாவற்குழி, அரியாலை, மானிப்பாய் போன்ற இடங்களில் தனிமையில் நடமாடும் வயோதிபர்கள் மற்றும் பெண்களை குறி வைத்து அவர்களிடம் சென்று தன்னை பொலிஸ் என அறிமுகப்படுத்தி பேச்சு கொடுத்து அவர்களின் உடமையில் இருக்கும் நகை, பணம் தொலைபேசி என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார்.
குறித்த நபர் கடந்த 2 வாரங்களில் 6 இடங்களில் குறித்த நபர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.
இது தொடர்பில் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பில் விசாரணைகளை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டனர்.
யாழ் பொலிஸ் நிலைய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் யாழ் நாவற்குழி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபர் யாழ் குற்றத்தடுப்புபிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 2 தங்கச் சங்கிலி 17,000 ரூபாய் பணம் உடபட மூன்றரை லட்சம் ரூபாய் பெறுமதியான கொள்ளைப்பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டன.
இதேவேளை, குறித்த கொள்ளைச் சம்பவங்களிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டதுடன், கொள்ளையிடப்பட்ட பொருட்களை விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபரினது மனைவியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த கைது நடவடிக்கை யாழ் குற்றத்தடுப்புபிரிவு பொறுப்பதிகாரி நெவின் பிரியந்த தலைமையில் பொலிஸ் உத்தியோகத்தர்களான விஜயகாந்த் வாகிசன் போன்ற குழுவினரால் மேற்கொள்ளப்பட்டன. R
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
9 hours ago