2025 மே 14, புதன்கிழமை

யாழில் மின்சாரம் தாக்கி பணியாளர் உயிரிழப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாண நகரப் பகுதியில் உள்ள பிரபல குளிர்பான விற்பனை நிலையத்தில் பணியாற்றிய இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

தேவாலய வீதி சங்கானை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேல்தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த  நிலையில், பாதுகாப்பற்ற முறையில் சுற்றப்பட்டிருந்த மின்சார வடத்தில் கால் பட்டதால் இளைஞர் தூக்கி வீசப்பட்டு உள்ளார் ,

திடீரென மின்சாரம் தடைப்பட்டதை அடுத்து அங்கு கடமையிலிருந்த பணியாளர்கள் மேல் தளத்துக்கு சென்று பார்த்தபோது குறித்த இளைஞன் தரையில் விழுந்து கிடந்துள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர் .

மரண விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்றுப் பரிசோதனை பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குளிர்பான விற்பனை நிலைய நிர்வாகத்தினரின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து ஏறப்ட்டுள்ளதாக  முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .