2025 மே 14, புதன்கிழமை

யாழில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்ய தேரர்

Editorial   / 2020 மார்ச் 12 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வேட்புமனுத் தாக்கல் இன்று (12) ஆரம்பமானது.

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்கான முதலாவது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு முதலாவது வேட்பு மனுவினை ஜனசெத பெரமுன சார்பில் பத்தரமுல்ல சீல ரத்தின தேரர் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

இன்று முதல் 19ஆம் திகதி வரை வேட்புமனுத்தாக்கல் ஏற்றுக்கொள்ளப்பட உள்ள நிலையில் யாழ். மாவட்ட செயலகத்தில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், மேலதிக பாதுகாப்பு கருதி பொலிஸாரின் மோப்ப நாய்களும் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X