Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
நடராசா கிருஸ்ணகுமார் / 2017 நவம்பர் 23 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
“பொதுமக்களை அச்சத்துக்குள் வாழவைக்கும் போர் ஆக்கிரமிப்பாளர்களின் உத்திகளில் ஒன்றாகவே, யாழ்ப்பாணத்தில் தற்போது அரங்கேறிவரும் குற்றச்செயல்களைப் பார்க்க வேண்டியுள்ளது” என, வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று(23) நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,
“போர் முடிவுற்று விட்டது என அரசாங்கம் அறிவித்து எட்டு ஆண்டுகள் கடந்துள்ளன. ஆனாலும், இயல்பு வாழ்க்கைக்குள் நாம் செல்ல பலதரப்பட்ட தடைகள் காணப்படுகின்றன. எங்களுடைய அரசியல் அபிலாசைக்கான அடிப்படைகள் நிவர்த்திக்கப்படவில்லை. இதற்கு மேலாக, நாம் ஒரு அச்சகரமான சூழலில் தான் நடத்தப்படுகின்றோம். இந்த அச்சத்தைத் தோற்றுவிப்பதற்கு எதிராக, நாம் செயற்பட வேண்டியுள்ளது.
“எமது சமூக இளைஞர்களிடையே, வன்முறைக் குழுக்கள் இயங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காகப் போராடும் இனத்தில், தெருச் சண்டைகளுக்கும் குற்றச்செயல்களுக்குமென வன்முறைக் குழுக்கள் உருவாவது என்பது வேதனைக்குரியது. மக்களை அச்சத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற இராணுவப் புலனாய்வு அமைப்புக்களின் உத்திகளே, அவ்வாறான வன்முறையை, குறித்த குழுக்கள் கற்றுக்கொண்டமைக்கு காரணமாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தினைப் பொறுத்தளவில், வன்முறைகளுக்கு அடிப்படையாக அரசியல் காரணங்கள் நிலவுகின்றன. தற்போது கூட வாள் வீச்சு, வாள் வெட்டு என எமது நாகரிகத்துக்குப் பொருந்தாத குற்றங்கள் நடைபெறுகின்றன. இவை தூண்டிவிடப்பட்டமைக்கு பின்னணிகள் இருப்பதை ஊகிக்க முடிகின்றது. தமிழ் மக்கள் மாவீரர்களுக்காக அஞ்சலிக்கும் இவ்வேளையில் தீடீர் என வன்முறைக்குழுக்களின் அட்டகாசம் தலை தூக்குகின்றது.
மாவீரர் வாரம் ஆரம்பமாகியுள்ளது. மாவீரர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக சகலதையும் அர்ப்பணித்தவர்கள். அவர்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு தமிழ் மகனிடத்திலும் உணர்வு பூர்வமான உறுதியை ஏற்படுத்துகின்றது. இதை அடக்குமுறையாளர்கள் ஏற்றக்கொள்ள முடியாத பட்சத்தில் வன்முறைப் பிரயோகங்களில் ஏமாறக்கூடிய எமது இளைஞர்களைப் பயன்படுத்தி வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு குளிர்காய்கின்றனர்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
29 Aug 2025
29 Aug 2025