Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 நவம்பர் 13 , பி.ப. 04:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம், குருநகர் பகுதியில், நேற்று (12) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இளம் குடும்பஸ்தர் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குருநகர், உத்தரிய மாதா ஆலயச் சந்தியிலுள்ள சலவைத் தொழிலகமொன்றுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரொருவர் சென்றுள்ளார். இதன்போது, அந்தக் குடும்பஸ்தரைப் பின்தொடர்ந்துச் சென்ற சிலர், அவரை வாளால் வெட்டியுள்ளதுடன், சலவைத் தொழிலக உரிமையாளரையும் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இதுதொடர்பில் அறிவிப்பதற்காக, அந்தப் பகுதி மக்கள், யாழ். பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோதும், பொலிஸார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் பொலிஸாரின் அவசர உதவிச் சேவை பிரிவின் தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்பு கொண்டு, சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு பொலிஸார் வந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Aug 2025
29 Aug 2025
29 Aug 2025