2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யாழில் விசேட கலந்துரையாடல்

Niroshini   / 2021 ஜூன் 29 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், பாடசாலை மாணவர்களுக்கான இணைய வழிக் கற்றலை விருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று, யாழ். மாவட்டச் செயலகத்தில், இன்று (29) நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுபப்pனருமான அங்கஜன் இராமநாதன், மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன், வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் உதயகுமார். வுலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, இணைய வழியில் கற்றலை மேற்கொள்வதற்கு மாணவர்கள் மத்தியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் தொழில்நுட்ப விடயங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பில் உரிய தரப்புகளுடன் பேசி உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .