2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழில் விசேட கலந்துரையாடல்

Niroshini   / 2021 நவம்பர் 21 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், எஸ். நிதர்ஷன்

இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று, இன்று (21) காலை 8.30 மணியளவில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில்  நடைபெற்றது.

வடபிராந்தியத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன் பிராந்தியத்தின் நிலையான வளர்ச்சியை அடைவதற்கான ஒருங்கிணைந்த பொறிமுறையை உருவாக்குதல், சிக்கல்களை கையாள்வதற்கான சாத்தியமான தீர்வுகள் மற்றும் உத்திகள் வழங்குவதை  நோக்காக கொண்டு, இந்த விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர்கள், வங்கிகளின் பிராந்திய பொது முகாமையாளர்கள், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது, முதலீட்டாளர்களின்  பிரச்சினைகளைக் நேரடியாக கேட்டறிந்து கொண்ட மத்திய வங்கி ஆளுநர், வடமாகாண ஆளுநர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும்  மற்றும் வங்கி அதிகாரிகளுடன் பேசி, அதற்கு தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X