Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2022 ஜூன் 12 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். தில்லைநாதன்
யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் நேற்று யாழ்ப்பாணம், திருநெல்வேலி பிரதேசத்தில் 30 இற்கு மேற்பட்ட வியாபார நிறுவனங்களில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் அரிசியை கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்த 5 விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நூடில்ஸ் மற்றும் பிஸ்கட் வகைகளை அதிக விலைக்கு விற்பனை செய்தமைக்காக இரண்டு விற்பனை நிலையங்கள் என மொத்தமாக ஏழு வியாபார நிறுவனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதென பாவனையாளர் அதிகார சபை உத்தியோகத்தர்களால் அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ச்சியாக வியாபார நிலையங்கள் பரிசோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுமென அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .