Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 10 , பி.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்.சாவகச்சேரி, மீசாலை பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இன்று (10) அதிகாலை நுழைந்த கொள்ளையா்கள், வீட்டில் தனித்திருந்த வயோதிப தம்பதியை தாக்கி படுகாயப்படுத்திவிட்டு நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுள்ளனர்.
அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடா்பாக தெரியவருவதாவது,
மீசாலை சோலையம்மன் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள குறித்த வீட்டுக்குள் நுழைவதற்காக வீட்டின் முன் பகுதி வழியாக பிரித்து திருடர்கள் வீட்டுக்குள் நுழைய முயற்சித்துள்ளனர்.
எனினும் நுழைய முடியாத நிலையில், சமயலறை புகைக்கூண்டை உடைத்து உள்நுழைய முயற்சித்துள்ளனர். அதுவும் முடியாமல்போன நிலையில், வீட்டுக்கு பின்னால் இருந்த ஏணியின் மூலம் எறி கூரையை பிரித்து உள்நுழைந்துள்ளனர்.
வீட்டிலிருந்த வயதான தம்பதியை கோடரியால் தாக்கிய கொள்ளையா்கள் 15 ஆயிரம் ரூபாய் பணம், மோதிரம், சங்கலி, தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனா்.
இந்தநிலையில் படுகாயமடைந்த வயோதிப தம்பதியை அயவலா்கள் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனா்.
சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
27 minute ago
38 minute ago
2 hours ago